Posts

நன்றி உணர்தல் உங்கள் வாழ்க்கையை எப்படி செழிப்பாக்குகிறது? - Deva Muthusamy

Image

ஆழ்மனதிற்கு நம் விருப்பங்களை கொண்டு செல்வது எப்படி?

Image
ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களை தான் நாம் நம் வாழ்க்கையாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நம் விருப்பங்களை ஆழ்மனதிற்கு கொண்டு செல்வது எப்படி என்பது தான் பலரின் மனதில் ஓடும் விடை தெரியாத பெரிய கேள்வி! அதற்க்கு இது தான் பதில்! உங்களுடைய விருப்பங்கள் ஆழ்மனதிற்கு செல்கிறதா இல்லையா என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஆழ்மனதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! அப்படியென்றால் நம் விருப்பங்களை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆழ்மனதை உருவாக்கும் அல்லது மாற்றியமைக்கும் சக்தி நம்முடைய விழிப்பான  (conscious) செயல்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்தாலும் கொஞ்சம் விழிப்போடு (conscious) செய்தாலே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை அடைவீர்கள்! எப்படி?? ஒரு உதாரணம் சொல்கிறேன்! நீங்கள் வழக்கமாக செய்யும் ஒரு செயலை எடுத்துக்கொள்வோம். அதாவது நீங்கள் உங்கள் வண்டி சாவியை வைக்கும் ஒரு பழக்கத்தை உதாரணமாக கொள்வோம். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்

இந்த பாதிப்பு உங்களுக்கு இருக்கிறதா?? இருந்தால் இன்றே துடைத்தெறியுங்கள்!!

Image
என்னவென்று தானே யோசிக்கிறீர்கள்! நம் முன்னேற்றத்தில் மட்டுமல்ல அடிப்படையான நிம்மதியான வாழ்க்கைக்கே இது மிகவும் அவசியம். அது என்னவென்றால், மற்றவர்களில் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலை கொள்ளாமல் இருப்பது! இதை நீங்கள் எல்லா இடங்களிலும் கேட்டிருக்கலாம்! எல்லா பிரபலங்களும் எல்லா மேடைகளிலும் பேசி கூட கேட்டிருப்பீர்கள். ஆனால் இதை செய்து பார்த்து அதன் விளைவை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா?  அது தான் இங்கே முக்கியமானது! இதன் தாக்கம் எப்படி பட்டது என்ன செய்ய முடியும். என்ன தெளிவு கிடைக்கும் என்பதை பின்வரும் கதை உங்களுக்கு உணர்த்தும். இது சிறிய விஷயம் என்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத பாதிப்பை உருவாக்கும் குரு தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீட்டின் வாசலில் விஜய் அமர்ந்திருப்பதை பார்க்கிறான். விஜய் மிகவும் சோகமாக தெரிந்ததால் அவன் அருகில் செல்கிறான் குரு என்னவென்று விசாரிக்க குரு : விஜய், என்னாச்சு? ஏன் இப்படி சோகமா உட்காதிருக்க!? விஜய் :  ஒண்ணுமில்லையா! (சலிப்பு,கோவம்) குரு : உன் முகத்தை பார்த்தாலே தெரியுது, என்னனு சொல்லு! (அழ

ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை மாறும்!

Image
எதை ஏற்றுக்கொள்வது, எப்படி ஏற்றுக்கொள்வதால் நம் வாழ்க்கை மாறும் என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா? நம்முடைய வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் செய்வதில் முக்கியமான பங்கு நாம் கடந்த காலத்தை இன்னும் நம் மனதில் சுமந்து கொண்டு இருப்பது தான்! அப்படி நாம் கடந்த காலத்தை மனதில் சுமந்து கொண்டு இருக்கும் போது, சிந்தனையும் செயலும் அதை சார்ந்தே இருக்கும். எந்த செயல் செய்யும்போது கடந்த காலம் போல நடந்துவிட கூடாது என்ற பயம் இருக்கும். அதே போல் யார் உங்களிடம் பேச வரும்போது நீங்கள் உங்கள் கடந்த காலத்தை புலம்ப ஆரம்பித்துவிடுவீர்கள்! சிலர் வெளிப்படையாக யாரிடமும் புலம்பாமல், தனக்குள்ளே புலம்பி தீர்ப்பார்கள். நீங்கள் அவசியம் இதிலிருந்து வெளிவந்து உங்களுக்கான அடுத்த விஷயத்தை செய்ய வேண்டும்! அப்போது தான் உங்கள் வாழ்க்கை மாறும்! இதை இன்னும் தெளிவாக விளக்கும் வகையில், இரு நண்பர்களின் உரையாடலை படியுங்கள்!  [ குருவை சந்திக்க அவன் நண்பன் விஜய் குருவின் வீட்டிற்கு வருகிறான். விஜய்  ஒரு புலம்பல் பேர்வழி என்றாலும் குருவிற்கு உயிர் நண்பன், குரு அவனை வரவேற்று சோபாவில் இருவரும் அமர்கின்றனர்] குரு : என்னடா ! எப்படி இருக்

வறுமை குறித்த பயத்தை வெற்றி கொள்ள! | Overcome fear

Image

ஈர்ப்பு விதி - இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

Image

Guided visualization for happiness

Image