என் வாழ்வில் நான் கண்ட அனுபவங்களை வைத்து கற்று கொண்ட சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நானும் நிறைய பெரியோர்களின் அறிவுரைகளையும் , அனுபவங்களையும் படித்திருக்கிறேன் , கேட்டிருக்கிறேன். ஆனால் அது என்வாழ்வின் அனுபவங்களாக மாறும் பொழுது தான் அதன் உண்மையான வலிமை புரிகிறது.
இது அறிவுரை அல்ல!!!
என் அனுபவங்கள் இவை !!!
அவற்றில் சில...
நானும் நிறைய பெரியோர்களின் அறிவுரைகளையும் , அனுபவங்களையும் படித்திருக்கிறேன் , கேட்டிருக்கிறேன். ஆனால் அது என்வாழ்வின் அனுபவங்களாக மாறும் பொழுது தான் அதன் உண்மையான வலிமை புரிகிறது.
இது அறிவுரை அல்ல!!!
என் அனுபவங்கள் இவை !!!
அவற்றில் சில...
- சுயஅலசல் - நாம் நம்மை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.தன்னையறிதல் என்பது இந்த உலகை அறிவதற்கு சமம்.இது ஆன்மீகம் அல்ல! நம்முடைய பலம் என்ன , நம்முடைய பலவீனம் என்ன என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது.ஒரு நிறுவனத்தை அல்லது குடும்பத்தை நிர்வகிப்பது போல நாம் நம்மையும் நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- கவனம் தான் நம்முடைய சக்தி! நாம் எதன் மீது கவனம் செலுத்துகிறோமோ அது தான் நம்முடைய வாழ்க்கையில் நடக்கிறது. உங்களுக்கு பிடித்தது , பிடிக்காதது என்பது விஷயமே அல்ல !!!
- செல்வசெழிப்பு என்பது நம்முடைய மனநிலையை பொறுத்த விஷயம். நம்மால் எதை செய்ய முடியும் எதை செய்ய முடியாது என்று வகுத்து கொள்கிறோமோ அதை பொறுத்துதான் பொருளாதாரம் அமையும். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வருடத்திற்கு இரு முறைதான் ஆடைகள் வாங்குவீர்கள் என்று வைத்து கொள்வோம் மாதம் ஒரு முறை ஆடைகள் வாங்குவதை பற்றி நீங்கள் நினைத்ததுண்டா ? நினையுங்கள் - நடக்கும். அப்படி நடக்கிறதென்றால் நிச்சயமாக உங்கள் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கும் .
- நிகழ்காலத்தில் வாழ்வது சொர்க்கத்தில் இருப்பதற்கு சமம். கடந்த காலத்தையோ வருங்காலத்தையோ நினைத்துக்கொண்டே இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை செய்யாதீர்கள். வருங்காலத்தை நினைப்பதற்க்கென்று தனியாக நேரம் ஒதுக்குங்கள்.
- இயற்க்கை சக்திகளோடு இணைந்ததுதான் நம் வாழ்கை.
இதை நாம் புரிந்து கொண்டால் மனஅமைதி கிடைக்கும்.எப்படி என்றால், எல்லாவற்றையும் நான் தான் செய்கிறேன் என்ற எண்ணத்தில் நாம் ஒரு செயலை செய்வோம் அதன் விளைவு நிகழ்வதற்குள் நம் மனம் பாடாய்பட்டு விடும் . ஒரு விதையை விதைக்கிறோம் அது முளைத்து வருமா என்று நாம் கவலை கொள்வதில்லை ஏனெனில் நமக்கு தெரியும் இயற்க்கை சக்திகள் இணைந்து அதை வளர செய்யும் என்று.
மனித முயற்சிகளும் அப்படித்தான் , நாம் எதிர்பார்த்த அந்த விளைவு நமக்கு நடக்கும் நம்மால் உணர முடிந்தால் , மனம் அமைதி கொள்ளும்.
அது நிச்சயம் நடந்தே தீரும்.
- நல்லதை எண்ணுங்கள் நல்லதே நடக்கும்.
இது நம் முன்னோர்கள் காலம் காலமாக நமக்கு சொல்லி வந்த விஷயம்.ஆனால் நாம் அவற்றை வெறும் வார்த்தைகளாக எடுத்துக்கொண்டோமே தவிர வாழ்க்கையாக பார்க்கவில்லை. இன்று இதை தான் ஈர்ப்பு விதி ரகசியம் என்று உலகம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.
தொடரும்..