Skip to main content

Posts

Showing posts from December, 2021

இந்த பாதிப்பு உங்களுக்கு இருக்கிறதா?? இருந்தால் இன்றே துடைத்தெறியுங்கள்!!

என்னவென்று தானே யோசிக்கிறீர்கள்! நம் முன்னேற்றத்தில் மட்டுமல்ல அடிப்படையான நிம்மதியான வாழ்க்கைக்கே இது மிகவும் அவசியம். அது என்னவென்றால், மற்றவர்களில் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலை கொள்ளாமல் இருப்பது! இதை நீங்கள் எல்லா இடங்களிலும் கேட்டிருக்கலாம்! எல்லா பிரபலங்களும் எல்லா மேடைகளிலும் பேசி கூட கேட்டிருப்பீர்கள். ஆனால் இதை செய்து பார்த்து அதன் விளைவை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா?  அது தான் இங்கே முக்கியமானது! இதன் தாக்கம் எப்படி பட்டது என்ன செய்ய முடியும். என்ன தெளிவு கிடைக்கும் என்பதை பின்வரும் கதை உங்களுக்கு உணர்த்தும். இது சிறிய விஷயம் என்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத பாதிப்பை உருவாக்கும் குரு தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீட்டின் வாசலில் விஜய் அமர்ந்திருப்பதை பார்க்கிறான். விஜய் மிகவும் சோகமாக தெரிந்ததால் அவன் அருகில் செல்கிறான் குரு என்னவென்று விசாரிக்க குரு : விஜய், என்னாச்சு? ஏன் இப்படி சோகமா உட்காதிருக்க!? விஜய் :  ஒண்ணுமில்லையா! (சலிப்பு,கோவம்) குரு : உன் முகத்தை பார்த்தாலே தெரியுது, என்னனு சொ...

ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை மாறும்!

எதை ஏற்றுக்கொள்வது, எப்படி ஏற்றுக்கொள்வதால் நம் வாழ்க்கை மாறும் என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா? நம்முடைய வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் செய்வதில் முக்கியமான பங்கு நாம் கடந்த காலத்தை இன்னும் நம் மனதில் சுமந்து கொண்டு இருப்பது தான்! அப்படி நாம் கடந்த காலத்தை மனதில் சுமந்து கொண்டு இருக்கும் போது, சிந்தனையும் செயலும் அதை சார்ந்தே இருக்கும். எந்த செயல் செய்யும்போது கடந்த காலம் போல நடந்துவிட கூடாது என்ற பயம் இருக்கும். அதே போல் யார் உங்களிடம் பேச வரும்போது நீங்கள் உங்கள் கடந்த காலத்தை புலம்ப ஆரம்பித்துவிடுவீர்கள்! சிலர் வெளிப்படையாக யாரிடமும் புலம்பாமல், தனக்குள்ளே புலம்பி தீர்ப்பார்கள். நீங்கள் அவசியம் இதிலிருந்து வெளிவந்து உங்களுக்கான அடுத்த விஷயத்தை செய்ய வேண்டும்! அப்போது தான் உங்கள் வாழ்க்கை மாறும்! இதை இன்னும் தெளிவாக விளக்கும் வகையில், இரு நண்பர்களின் உரையாடலை படியுங்கள்!  [ குருவை சந்திக்க அவன் நண்பன் விஜய் குருவின் வீட்டிற்கு வருகிறான். விஜய்  ஒரு புலம்பல் பேர்வழி என்றாலும் குருவிற்கு உயிர் நண்பன், குரு அவனை வரவேற்று சோபாவில் இருவரும் அமர்கின்றனர்] குரு : என்னடா ! எப்...