ஒரு செயலை நாம் செய்ய துவங்கும்போது நமக்குள் ஏற்படும் தோல்வி பயம் நம்மை நிலைகுலைய செய்கின்றன ...
தோல்வியை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்...
எல்லாவற்றையும் நாம் நல்லதாகவே நினைக்கலாமே என்று நமக்கே கூட தோன்றும்..
ஆனால் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே ஏன்?
தோல்வி என்பது என்ன?
நாம் நம் இலக்கை நோக்கி பயணிக்கும் போது நாம் சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். நாம் அதை அந்த பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், அதோடு சேர்ந்து தோல்வி குறித்த அணைத்து சூழ்நிலைகளையும் கற்பனை செய்து நம் இலக்கை நோக்கிய பயணத்தை விட்டுவிடலாமா என்ற மனநிலையில் வந்து நிற்கிறோம்..
இது வெறும் உங்கள் கற்பனைகளால் ஏற்பட்ட மனநிலை தான்..
நாம் எப்போது முயற்சியை கைவிடுகிறோமோ அப்போது தான் உண்மையில் தோற்றுப்போகிறோம்..
அதே பிரச்சனைகளை சவால்களாக ஏற்று கொண்டு உங்களால் தொடர்ந்து முன்னேறி செல்ல முடியுமென்றால் உங்களை தடுத்து நிறுத்த இந்த உலகில் எந்த சக்தியும் கிடையாது..
வெற்றியாளர்கள் இதைத்தான் செய்கிறார்கள்..
வெற்றியாளர்களுக்கும் தோல்வியடைந்தவர்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதில்லை..
சூழ்நிலைகளை கையாளும் விதம்தான் அவர்களின் தரத்தை நிர்ணயிக்கிறது..
தோல்விகளையும் வெற்றிகளையும் தெளிவாக வரையறுக்க வேண்டுமென்றால் !!
நம் இலக்கை நோக்கிய பயணத்தில்..
தோல்விகள் - நமக்கு எதோ ஒன்றை நாம் நம் இலக்கை அடைய தேவையான ஒன்றை நமக்கு கற்று தருகின்றன..
வெற்றிகள் - நாம் சரியாக கற்று கொண்டு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றன..
வெற்றியும் தோல்வியும் இரு வேறு சம்பவங்கள் மட்டும் தான்..
அதிலிருந்து நாம் என்ன கற்று கொண்டோம் என்பது தான் விஷயம்..
என்ன நடந்தாலும் நாம் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்..
புரிந்தவர்கள் முன்னேறுவார்கள் ..
புரியாதவர்கள் புலம்பிக்கொண்டே இருக்க போகிறார்கள்..
யாராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..
-----------------------------------------------------------------------------------------
உங்கள் மனநிலையை நேர்மறையாக (positive) மாற்ற 21 நாட்கள் போதும்..
மேலும் ஆலோசனைகளும் , பயிற்சிகளுக்கும்
தொடர்பு கொள்ள - 9080477319
-----------------------------------------------------------------------------------------
உங்கள் மனநிலையை நேர்மறையாக (positive) மாற்ற 21 நாட்கள் போதும்..
மேலும் ஆலோசனைகளும் , பயிற்சிகளுக்கும்
தொடர்பு கொள்ள - 9080477319

Comments
Post a Comment