நடந்த தவறுகளுக்கு நாம் பொதுவாக பிறரை குறை கூறுவது தான் வழக்கம்.
ஒருவர் இன்னொருவர் மீது பழி சுமத்துதல் என்பது நம் வாழ்வின் வழக்கமாகிவிட்டது.
அந்த நேரங்களில் நாம் எப்படியாவது தப்பித்தால் போதும் என்று எண்ணி மக்கள் இதை செய்கின்றனர்.
ஆனால் இது அவர்களின் வாழ்வில் எவ்வளவு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு புரிவதில்லை.
நீங்கள் ஒருவரையோ அல்லது ஒரு சூழ்நிலையையோ குறை கூறுகிறீர்கள் என்றால் நீங்கள் எதிர்மறையான ஆற்றலை வெளிப்படுத்துகிறீர்கள் என்று பொருள் .
அப்படியென்றால் நீங்கள் இன்னும் அதே போன்ற விஷயங்களை தானே ஈர்த்தாக வேண்டும்.அது மேலும் மேலும் தொடந்து உங்கள் வாழ்க்கையையே முடக்கி விடும்.
நான் கலந்தாலோசித்த நிறைய நண்பர்கள் அதிகமா இதில் தான் சிக்கி கொண்டு தவிக்கின்றனர். அவர்களுக்கு நான் இதை எடுத்துரைத்த போது பலர் அதை ஏற்கவில்லை ஆனால் ஏற்று கொண்ட சிலரின் வாழ்கை மாற தொடங்கியது .
நிச்சயமா நீங்கள் இதை புரிந்து கொண்டிர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையும் மாற தொடங்கும் .
ஒவ்வொரு முறை நீங்கள் குறை கூற முயலும்போது இது சரிதானா என்று சிந்தித்து பாருங்கள். தவறு நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருந்தாலும் கூட தன்னிடம் தவறில்லை என்பதை மட்டும் மற்றவர்களுக்கு தெளிவு படுத்துவிட்டு அந்த இடத்தில இருந்து விலகி விடுங்கள்.
அதை அதோடு விட்டு விட்டு நீங்கள் நேசிக்கக்கூடிய விஷயங்களை பற்றி சிந்திக்க துவங்குங்கள்.இது உங்களின் நேர்மறை தன்மையை அதிகப்படுத்தி உங்களை மேலும் மேலும் உயர்த்தி கொண்டே போகும்.
குறை கூற வேண்டாம் என்று திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.
எல்லா விஷயங்களிலும் நல்லதை மட்டுமே பாருங்கள் .நல்லதையே அதிகமாக பெறுவீர்கள்.
அன்பையே கொடுப்போம் ! அன்பையே பெறுவோம் !!

Comments
Post a Comment