Skip to main content

நாளை என்று ஒன்று இல்லை - இது காலத்தின் ரகசியம்


இதை உங்களால் நம்ப முடியவில்லை தானே, ஆனால் இது உண்மைதான்.


எல்லா நேரங்களையும் நாம் இன்று என்று தானே அனுபவிக்கிறோம்.நான் நாளையாகவே அனுபவித்தேன் என்று உங்களால் சொல்ல முடியுமா முடியாது. ஏனென்றால் நாளை என்பது  உண்மையல்ல.

சரி இப்போது எதற்கு இதை பற்றி இழுக்கிறாய் என்று தானே கேட்க்கிறீர்கள் விஷயம் இருக்கிறது,

நாம் நேற்று நடந்ததை பற்றி கவலை படுவதை விட நாளை என்ன நடக்குமோ என்பதை பற்றி தான் அதிகம் கவலை கொள்கிறோம்.

உண்மைதானே !

வருங்காலத்திற்காக திட்டமிட்டு செயல் படுவதை நான் தவறென்று கூறவில்லை.எதற்கென்றால் அந்த திட்டம் தான் இப்போது இந்த நொடியில் உங்களை சரியான செயலை செய்ய வழி வகுக்கும்.

ஆனால் நம்மில் நிறைய மக்கள் எப்பொழுதும்  நாளை பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார்கள் . அது உங்களை ஒருபோதும் உங்கள் கனவு வாழ்க்கைக்கு இட்டு செல்லாது.

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்து அதை பிரபஞ்சத்திடம்
ஒப்படைத்து விடுங்கள் . பின்னர் அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை .
அது நீங்கள் என்ன செய்ய வேண்டும்,  எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு வழி காட்டும்.
அதை நீங்கள் நம்பினால் நம்பி செயல்பட்டால் உங்கள் கனவை சென்றடைய வேண்டிய பாதையை உங்களுக்கு காட்டும் .
அது காட்டும் பாதையில் ஆனந்தமாக பயணியுங்கள்.உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

நாளை பற்றிய கவலையை விடுங்கள் . இன்றை முழுமையாகவும் ஆனந்தமாகவும் வாழுங்கள்.
உங்களுக்குள் நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் எழும் அவற்றை தீர்ப்பதற்காக தான் நான் இருக்கிறேன் . மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது
facebook.com/lawofhappylife என்ற பக்கத்தில் குறுந்தகவல் அனுப்புங்கள்

ரகசியத்தை பயன்படுத்த ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே இது உங்களுக்கு புரிந்து விடும்.

உங்கள் வாழ்க்கை மாயாஜாலமாக அமையட்டும் .

நன்றி!





Comments

Popular posts from this blog

(High volume) ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதில் தடுமாற்றமா ??

ஆழ்மனதிற்கு நம் விருப்பங்களை கொண்டு செல்வது எப்படி?

ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களை தான் நாம் நம் வாழ்க்கையாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நம் விருப்பங்களை ஆழ்மனதிற்கு கொண்டு செல்வது எப்படி என்பது தான் பலரின் மனதில் ஓடும் விடை தெரியாத பெரிய கேள்வி! அதற்க்கு இது தான் பதில்! உங்களுடைய விருப்பங்கள் ஆழ்மனதிற்கு செல்கிறதா இல்லையா என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஆழ்மனதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! அப்படியென்றால் நம் விருப்பங்களை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆழ்மனதை உருவாக்கும் அல்லது மாற்றியமைக்கும் சக்தி நம்முடைய விழிப்பான  (conscious) செயல்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்தாலும் கொஞ்சம் விழிப்போடு (conscious) செய்தாலே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை அடைவீர்கள்! எப்படி?? ஒரு உதாரணம் சொல்கிறேன்! நீங்கள் வழக்கமாக செய்யும் ஒரு செயலை எடுத்துக்கொள்வோம். அதாவது நீங்கள் உங்கள் வண்டி சாவியை வைக்கும் ஒரு பழக்கத்தை உதாரணமாக கொள்வோம். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவ...

நன்றி உணர்தல் உங்கள் வாழ்க்கையை எப்படி செழிப்பாக்குகிறது? - Deva Muthusamy