தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு சில நிமிடங்களை உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களுக்காகவும் , கிடைத்த பொருட்களுக்காகவும் நன்றி செலுத்துவதற்காக ஒதுக்குங்கள்.
இது மிகவும் எளிமையானது ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது.
கேள்வி கேட்பது உங்கள் மனத்தை நன்றியுணர்வின் மீது கவனம் செலுத்த ஒரு எளிய வழி முறை .
ஒரு நாளைக்கு மூன்று முறையாவது உங்களிடம் நீங்களே " இப்போது நான் நன்றியுணர்வு கொண்டுள்ள விஷயம் என்ன ? " என்று கேளுங்கள் .
உங்கள் மனம் தானாகவே அதற்கு விடை கண்டறியும் முயற்சியில் இறங்கி நன்றியை உணர செய்து விடும்.
அப்படி உங்கள் மனதில் தோன்றும் நன்றியை ஒரு துண்டு காகிதத்தில் " நான் எதற்க்காக நன்றியுணர்வுடன் இருக்கிறேன்?" என்று கேள்வியை கேட்டு அதற்க்கான பதிலை எழுதிக்கொள்ளுங்கள்.
அவற்றை எல்லாம் ஒரே இடத்தில் சேகரியுங்கள். வார இறுதியில் அவற்றை எடுத்து எண்ணி பாருங்கள். அந்த எண்ணிக்கை 36 க்கு\மேல் இருந்தால் நீங்கள் இயல்பாகவே நன்றியுணர்வுடன் இருப்பவர்கள் என்பது புலப்படும்.
மேலும் பல வழிகளில் உங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உங்களுக்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்கிறேன்.
10 நாள் பயிற்சி மேற்கொள்ள உடனே அழையுங்கள் 7601995307.
மேலும் இதை பற்றி அதிகமாக கலந்துரையாடலாம் .
இந்த அற்புதமான நாளுக்கு நன்றி!
நன்றி !!

Comments
Post a Comment