நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு , உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு - அப்துல் கலாம்
இந்த வாசகத்தின் மூலம் ஈர்ப்பு விதியை பற்றி மறைமுகமாக சொல்லி இருக்கிறார் கலாம் ஐயா . இயற்கையின் இந்த விதிகளை பற்றி நன்கு புரிந்து கொண்டு அதை பயன்படுத்தி நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக தன்னை உருவாக்கி இருக்கிறார் .
கனவு காண்போம் அதை அவரை போல சாதித்தும் காட்டுவோம்...
தீர்மானிக்கும் மனதின் ரகசியம் கற்பனையில்தான் முழுக்க முழுக்கப் புதைந்து கிடக்கிறது - கிறிஸ்டியன் டி லார்சன்
இந்த வரிகளை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் அற்புதம் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.
விளக்கமாக பார்ப்போம்
நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்த பிறகு அதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் .
ஏன் கற்பனை செய்ய வேண்டும் ?
நம்முடைய ஆழ் மனதில் என்ன பதிவுகள் இருக்கிறதோ அதை அடிப்படையாக கொண்டு தான் நம் வாழ்க்கை சூழ்நிலைகள் அமையும்.
உதாரணத்திற்கு ..
உங்கள் கைப்பேசியை நீங்கள் தொண்டர்ந்து வீட்டில் ஓர் இடத்தில் வைக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம் .
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் உங்கள் கை தன்னால் கைபப்பேசியை
அந்த இடத்தில வைக்கும் ..
உங்கள் வீட்டு சுவர் கடிகாரத்தை இடம் மாற்றி வைத்து பாருங்கள்..
எப்போதெல்லாம் மணி பார்க்க வேண்டும் தோன்றினாலும் உங்கள் பார்வை கடிகாரம் இருந்த பழைய இடத்தையே பார்க்கும்
.
இந்த மாதிரி அனுபவங்கள் நிச்சயம் உங்கள் வாழ்விலும் ஏற்பட்டிருக்கும்.
இதற்க்கெல்லாம் காரணம் நம் ஆழ் மன பதிவுகள் தான்..
நாம் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தையோ அல்லது செயலையோ நாம் நினைத்து கொண்டிருந்தாலோ அல்லது செய்து கொண்டிருந்தாலோ அவை நம் ஆழ் மனதிற்குள் பதிவாகும்.
இந்த பதிவுகளை கொண்டு தான் ஈர்ப்பு விதியானது நம் வாழ்க்கையை அமைத்து கொண்டிருக்கிறது.
நம் ஆழ் மன பதிவுகளை நாம் மாற்றாதவரை நம் வாழ்க்கையை மாற்ற முடியாது ...
கற்பனை செய்வதினால் ..
அதாவது கண்களை மூடிக்கொண்டு நம் மனதில் நம்முடைய விருப்பங்களை ஏற்கனவே அடைத்துவிட்டது போல் காட்சி படுத்தி பார்ப்பதனால் ...
அதை திரும்ப திரும்ப செய்வதனால் அவை ஆழ் மன பதிவுகளாக சேரும் .
அதை ஈர்ப்பு விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் .
நம் வாழ்க்கை நம் விருப்பப்படி நடக்கும்..
கலாம் ஐயா கனவு காண சொன்னதற்க்கான முழுமையான அர்த்தம் இப்போது தான் புரிகிறது !!!
பிரபஞ்சத்திற்கு நன்றி !
இந்த அற்புதமான வாழ்க்கைக்கு நன்றி !!
நம் ஆழ் மன பதிவுகளை கொண்டு தான் நம்முடைய வாழ்க்கை இயக்கப்படுகிறதா ?
அடுத்த கட்டுரையில் சோதித்து பார்த்து விடுவோம்.
நன்றி !
<< நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழுங்கள் - முதல் படி
நன்றியுணர்வு தான் மாற்றத்தை துரிதப்படுத்தும் - மூன்றாம் படி >>

Comments
Post a Comment