Skip to main content

நன்றியுணர்வு தான் மாற்றத்தை துரிதப்படுத்தும் - மூன்றாம் படி




நம்முடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதே போல் அந்த மாற்றம் விரைவாக நிகழ வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். ஆனால் அவசரம் என்பது கூட ஒரு எதிர்மறை உணர்வு தான்.



மாற்றங்கள் விரைவாக நிகழ வேண்டும் என்று சொன்னால் நாம் நன்றியுணர்வோடு வாழ வேண்டியது அவசியம்.

இதுவரை நீங்கள் நன்றியுணர்வோடு இருந்தீர்களா என்பது இப்போது விஷயமல்ல எனவே இந்த நொடியில் இருந்து நன்றியுணர்வோடு வாழ போகிறேன் என்று உறுதிமொழி எடுத்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை படிப்படியாக மாறும் என்ற புரிதலோடு முன்னேறுங்கள்.
வாழ்க்கை உங்கள் வசமாகட்டும்.

உங்களுக்கு பயன்படும் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி செலுத்துங்கள் .
உங்கள் உறவுகளுக்கு நன்றி செலுத்துங்கள்.

நீங்கள் நன்றி செலுத்தும் அணைத்து விஷயங்களையும் பட்டியலிடுங்கள். ரகசியம் திரைப்படத்தில் கூறியது போல் அதன் மாயாஜாலத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது ,

நாம் ஒவ்வொரு வேளை உணவு உண்ண வேண்டும் என்று சொன்னால் அதன் பின்னால் எத்தனை மனிதர்களின் உழைப்பும் , இயற்கையின் கொடையும் இருக்கிறது என்று சிந்தித்து பார்க்கிறேன்...

எத்தனை நெற்பயிர்களின் தியாகம் இருக்கிறது என்பதை உணரும்போது...
ஒரு உயிரின் தியாகம் தான் மற்றோரு உயிரின் வாழ்க்கை.


நம்மை சுற்றி உள்ள அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை..
உண்மையில் நாம் நன்றி செலுத்தும் விஷயங்கள் தான் அதிகமே தவிர குறைகூறும் விஷயங்கள் அல்ல.

ஒரு செயலை துவங்கும்போதும் நன்றி என்று சொல்லுங்கள் .முடிந்த பின்னும் நன்றி என்று சொல்லுங்கள்.இனி செய்ய போகும் செயலுக்கும் நன்றி என்று சொல்லுங்கள்.

உங்களுடைய ஒரே பிரார்த்தனை நன்றி செலுத்துவது தான் என்றால் , அது போதும்.

நாம் நன்றியுணர்வுடன் வாழ துவங்கியதும் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் உணர முடியும்.அதன் சக்தியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள் அது உங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் மாற்றும் வல்லமையை உங்களுக்கு கொடுக்கும்.

நாம் எதற்கு நன்றி செலுத்துகிறோமோ அதையே பெறுகிறோம். நீங்கள் நன்றி செலுத்தும் விஷயங்கள் உங்கள் வாழ்வில் அதிகரிக்க துவங்கும். நன்றியுணர்வு நீங்கள் எப்போதும் நல்ல உணர்வுடன் இருப்பதை உறுதி செய்து உங்கள் விருப்பங்கள் விரைவாக நிகழ அது வழி செய்யும்.

நன்றியுணர்வு என்பது செலவச் செழிப்பு , குறைகூறுதல் என்பது ஏழ்மை - கிறித்தவ தோத்திரப்பாடல் 

நன்றி !


<< கனவு காணுங்கள் - அப்துல் கலாம் ஐயா சொன்ன ரகசியம்- இரண்டாம் படி

Comments

Popular posts from this blog

(High volume) ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதில் தடுமாற்றமா ??

ஆழ்மனதிற்கு நம் விருப்பங்களை கொண்டு செல்வது எப்படி?

ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களை தான் நாம் நம் வாழ்க்கையாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நம் விருப்பங்களை ஆழ்மனதிற்கு கொண்டு செல்வது எப்படி என்பது தான் பலரின் மனதில் ஓடும் விடை தெரியாத பெரிய கேள்வி! அதற்க்கு இது தான் பதில்! உங்களுடைய விருப்பங்கள் ஆழ்மனதிற்கு செல்கிறதா இல்லையா என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஆழ்மனதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! அப்படியென்றால் நம் விருப்பங்களை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆழ்மனதை உருவாக்கும் அல்லது மாற்றியமைக்கும் சக்தி நம்முடைய விழிப்பான  (conscious) செயல்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்தாலும் கொஞ்சம் விழிப்போடு (conscious) செய்தாலே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை அடைவீர்கள்! எப்படி?? ஒரு உதாரணம் சொல்கிறேன்! நீங்கள் வழக்கமாக செய்யும் ஒரு செயலை எடுத்துக்கொள்வோம். அதாவது நீங்கள் உங்கள் வண்டி சாவியை வைக்கும் ஒரு பழக்கத்தை உதாரணமாக கொள்வோம். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவ...

நன்றி உணர்தல் உங்கள் வாழ்க்கையை எப்படி செழிப்பாக்குகிறது? - Deva Muthusamy