முதல் படி - உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள் அதை அடைய முடியும் என்று நம்புங்கள்.
தெளிவான விருப்பம் தான் பௌதீக வடிவம் பெரும்.எனவே உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்து எழுதிக்கொள்ளுங்கள்.
உங்களுடைய ஆரோக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
உங்களுடைய பண வரவு எப்படி இருக்க வேண்டும் ?
உங்கள் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் ?
\
உங்கள் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் ?
நீங்கள் எந்த இடங்களுக்கு சென்று வர ஆசை படுகிறீர்கள் ?
உங்கள் வேலை எப்படி இருக்க வேண்டும் ?
உங்கள் தொழில் எப்படி இருக்க வேண்டும் ?
உங்கள் லட்சியம் என்ன ?
இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்கள் மனம் தொட்ட பதில்களை எழுதுங்கள்.
அவற்றை எல்லாம் ஏற்கனவே நடந்து விட்டது போல் எழுதிக்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு ..
நீங்கள் ரூ 20000 சம்பாதிக்க விரும்பினால் ,
"நான் ரூ 20000 சம்பாதித்ததற்கு நன்றி \"
"நான் எனக்கு பிடித்த வேலையை செய்வதற்கு நன்றி "
இப்போது உங்கள் மனம் ஆனந்தத்தை உணரும் ...
முதலில் எந்த விஷயங்களை எழுதிக்கொள்ள வேண்டும் என்பதில் உங்களுக்கு குழப்பம் வந்தால் உங்களுக்கு இப்பொழுது அவசியமாக தேவைப்படும் விஷயங்களை தேர்ந்தெடுக்கலாம்.
தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த ஆனந்தம் தான் உங்களுக்கு விருப்பமான எல்லாவற்றையும் ஈர்க்கும் காந்த\சக்தியை உருவாக்கும் .
நீங்கள் அறிய வேண்டிய ரகசியம்
நன்றி !
கனவு காணுங்கள் - அப்துல் கலாம் ஐயா சொன்ன ரகசியம்- இரண்டாம் படி >>

Comments
Post a Comment