Skip to main content

ஈர்ப்பு விதி - வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரே விதி !!!




How to change my life?
basic of happy life - law of happy life




ஏனைய மக்கள் தினமும் தங்களுக்குள் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டு  இருக்கிறார்கள் . 


" என்னுடைய வாழ்க்கையை மாற்றுவது எப்படி?"

ஆனால் இதற்கான விடை பெரும்பாலான மனிதர்களுக்கு தெரிவதில்லை..

நமக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறையை நம் முன்னோர்கள் நமக்காக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்..




"எனக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை நான் வாழ வேண்டும்" என்ற எண்ணம் நம் எல்லாருக்கும் இருக்கும்..

ஆனால் நம்மில் எத்தனை பேர்  நமக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறோம்?

ஏன் நம்மிடம் உழைப்பில்லையா ?
முயற்சி இல்லையா ?

எல்லாம் இருக்கிறது, ஆனால் என் இலக்கை நான் இன்னும் அடையவில்லை என்று சொல்பவர்கள் தான் இங்கு அதிகம்,

உங்களை சுற்றி உள்ள சிலர் தங்கள் இலக்கை அதாவது பொருளாதார இலக்கை அடைந்து விட்டதாக சொன்னார்கள் என்றால் அவர்களிடம் அவர்களின்  உறவுகள் மற்றும் ஆரோக்கியம் பற்றி கேட்டு பாருங்கள்...

எதோ ஒன்றை நான் இழந்து விட்டதாக  அவர்கள் புலம்புவதை பார்க்கலாம்..

உண்மையான செல்வம் என்பது அன்பான உறவுகள் மற்றும் பூரண ஆரோக்கியம் மற்றும் நல்ல பொருளாதாரம் தானே ...

இதில் ஏதோ ஒன்றை மட்டும் அடைந்து விட்டு நல்ல வாழ்க்கையை வாழ்கிறோம் என்று சொல்லிவிட முடியாதல்லவா ?

எல்லா செல்வங்களையும் பெற்று நாம் ஒரு மகத்தான வாழ்க்கையை வாழ முடியும் !

அந்த மகத்தான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளை நம் மனித இனம்  பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து கண்டறிந்து கொண்டது.

அது தான் ஈர்ப்பு விதி..

" எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தான் எதிர்காலத்தை உருவாக்குகிறது"    - ஈர்ப்பு விதி 

அதாவது நீங்கள் எதன் மேல் கவனம் செலுத்துகிறீர்களோ அதையே உங்கள் வாழ்க்கைக்குள் ஈர்க்கிறீர்கள்..

உதாரணத்திற்கு நீங்கள் எப்பொழுதும் வேலைக்கு தாமதமாக செல்வீர்கள் என்று எடுத்துக்கொள்வோம் , அலுவலகத்தில் நுழைந்தவுடன் கடிகாரத்தை பார்த்துவிட்டு  " இன்றும்  தாமதமாகிவிட்டது" என்று நீங்கள் சொல்வீர்களேயானால் அடுத்த நாளும் நீங்கள் இதையே சொல்வதற்க்கான சூழ்நிலையையே மீண்டும் ஈர்க்கிறீர்கள்..


"எல்லோருக்கும் கடினமாக தோன்றும் ஒரு செயலை நான் மிகவும் எளிமையாக செய்கிறேன் "

என்று நீங்கள் நினைத்தால் அந்த செயல் உங்களுக்கு எப்போதும் எளிமையாகவே இருக்கும்..

இதை செய்வது தான் ஈர்ப்பு விதி..

உங்கள் உணர்வுகளுக்கு அது செயல் விடை அளித்துக்கொண்டிருக்கிறது..

இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அல்லது இதை ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் தடுத்தாலும் இது இயங்கி கொண்டேயிருக்கும் ஒரு பிரபஞ்ச விதி.

"ஈர்ப்பு விதி என்று சொல்வதெல்லாம் பொய்"
என்று நீங்கள் சொன்னால் அதுவும் உண்மை என்றாகிவிடும் , ஏனென்றால் அதை செய்வதும் ஈர்ப்பு விதி தான் !!

அதனால் இது உண்மையா பொய்யா என்று ஆராய்வதை விடுத்து வெறுமனே இதை முயற்சித்து பாருங்கள், அப்போது அது செய்யும் மாயாஜாலத்தை பார்த்து பிரம்மித்து போவீர்கள்..

ஈர்ப்பு விதியை புரிந்து கொள்ள தொடங்குவீர்கள் !!

நம்பிக்கையும் வேண்டாம் அவநம்பிக்கையும் வேண்டாம் திறந்த மனதோடு முயற்சித்து பாருங்கள் ..

நிச்சயம் நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள்..
  




Comments

Popular posts from this blog

(High volume) ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதில் தடுமாற்றமா ??

ஆழ்மனதிற்கு நம் விருப்பங்களை கொண்டு செல்வது எப்படி?

ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களை தான் நாம் நம் வாழ்க்கையாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நம் விருப்பங்களை ஆழ்மனதிற்கு கொண்டு செல்வது எப்படி என்பது தான் பலரின் மனதில் ஓடும் விடை தெரியாத பெரிய கேள்வி! அதற்க்கு இது தான் பதில்! உங்களுடைய விருப்பங்கள் ஆழ்மனதிற்கு செல்கிறதா இல்லையா என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஆழ்மனதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! அப்படியென்றால் நம் விருப்பங்களை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆழ்மனதை உருவாக்கும் அல்லது மாற்றியமைக்கும் சக்தி நம்முடைய விழிப்பான  (conscious) செயல்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்தாலும் கொஞ்சம் விழிப்போடு (conscious) செய்தாலே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை அடைவீர்கள்! எப்படி?? ஒரு உதாரணம் சொல்கிறேன்! நீங்கள் வழக்கமாக செய்யும் ஒரு செயலை எடுத்துக்கொள்வோம். அதாவது நீங்கள் உங்கள் வண்டி சாவியை வைக்கும் ஒரு பழக்கத்தை உதாரணமாக கொள்வோம். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவ...

நன்றி உணர்தல் உங்கள் வாழ்க்கையை எப்படி செழிப்பாக்குகிறது? - Deva Muthusamy